மருத்துவத்தில் மறதி
நோயாகிறது மனித
மனதிற்கோ மறதி
மருந்தாகிறது

நாம் இருக்கும்
நிலைமையில்
இது தேவையா
என இழந்த
பலசந்தோஷங்கள்
தான் அதிகம்
(நிதர்சனம்)

அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும்
சிலர் அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை

நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை

என் விழிகளுக்குள்
நீ இருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்

எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

வாழ்வில் உண்மையும்
அன்பும் நிறைந்திருந்தால்
வாழ்வு எப்போதும்
மகிழ்ச்சியாகவே இருக்கும்

நாளைய எதிர்பார்ப்பில்
இன்று தள்ளாட வேண்டாம்
இன்று முயன்றால் நாளை உருவாகும்

இப்போது செய்யும்
ஒரு செயல்
நாளைய வெற்றிக்கான விதை

வலி தரும் நினைவுகளே
நம் உள்ளத்தை
வலுப்படுத்தும் பாடமாக
மாறுகின்றன