பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே

உரிமைகள்
ஊமையாகின்ற போது
உறவுகள்
உணர்வுகளற்று போகிறது

நீயாக நீ உயர்ந்தால்தான்
மற்றவர்கள் உன்னை
மதிக்க தொடங்குவார்கள்

தோல்வியோடு நட்பு வைத்தவனே
வாழ்க்கையில் வெற்றி காண்பான்

உண்மை இல்லா உறவுகளிடம்
ஒட்டி இருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது

தனிமையும்
சில நேரங்களில்
தவம்தான்
ஆனால் தவமும்
பல நாட்கள்
தொடர்ந்தால் சாபமாகும்

அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு

நமக்கு தூக்கம் வரலைனா
நாம யாருடைய
கனவுலயோ
முழிச்சுகிட்டு இருக்கோம்னு
அர்த்தம்

நேர்மை உண்மை
இல்லாத போது
அன்பை மட்டும் வைத்து
எதையும் சாதித்து விடலாம்
என்று நினைத்து விடாதே

நேற்றைய நினைவுகள்
பயனற்றது
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே
இன்று மட்டுமே
நிஜம்
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்