சோகமான இரவுகள் தான்
பலமான சூரியனை
வரவேற்கத் தக்கவையாகிறது

துணிச்சல் இல்லாமல்
வெற்றியில்லை
நம்பிக்கை இல்லாமல்
வாழ்க்கை இல்லை

நாளை ஒளிர விரும்பினால்
இன்று உழைக்க தயங்காதே

என் வாழ்வின்
ஓவ்வொரு தேடலிலும்
ஏதோ ஒன்று கிடைக்கிறது
நான் தேடியதை தவிர

வழமைபோல் உலகம்
அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள்
துடிப்பதை ரசித்தவண்ணம்

சகித்துக்கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை

பேச மாட்டாயா
என்ற ஏக்கத்திலும்
தொல்லையாக இருக்கிறோமோ
என்ற குழப்பத்திலும்
தொடர்கிறது வாழ்க்கை

வசதியாக வாழ்வதை விட
மன நிம்மதியோட
மகிழ்ச்சியாக
வாழ்வதே சிறந்தது

யாரும் உன்னை
நம்பவில்லை என்றால்
நீ தான் உன்னை
நிரூபிக்க வேண்டிய நேரம்

எந்த அவமானத்திற்கும்
கண்ணீர் வடித்து
கரைந்து போக
தேவையில்லை