எல்லா மானிடருக்களுக்கு
பின்னாலும் மறைக்கப்பட்ட
கதையும் மறுக்கப்பட்ட
கதையும் இருந்து
கொண்டு தான் இருக்கிறது

சூழ்நிலை சாதகமாக
இருக்க வேண்டும் என்று
காத்திருக்காதே
நீ முதலில் சாதிக்கத் தொடங்கு
சூழ்நிலை பின்தொடரும்

நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது

நிழலால் பயந்து ஓடும் வாழ்க்கை
வெளிச்சத்தையே மறந்து விடும்

கடந்த காலத்தின்
சுமையை விட்டுவிட்டு
புதிய கனவுகளை
உருவாக்குங்கள்

நாம் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை
நம் எதிரே
நிற்பவர்களின்
குணங்களும் செயல்களுமே
தீர்மானிக்கிறது
நாம் அன்பாக இருப்பதும்
திமிராக இருப்பதும்

இடிபாடுகள் வந்தாலும்
முயற்சி கையில் பிடிவாதமாக
இருக்க வேண்டும்

தனிமை நான்
தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள்
எனக்கு பரிசளித்தது

பொறாமை என்பது
மனதைச் சாம்பலாக்கும் அடுப்பு

தோல்வியின்றி வெற்றி வந்தால்
அதன் மதிப்பு தெரியாது