நாளை என்ன ஆகும்
என்று பயப்படாமல்
இன்று என்ன செய்யலாம்
என்று யோசிக்கவும்

நமக்கு பிடித்தவர்களின்
மாற்றத்திற்காக
நம் வாழ்வினை வெறுக்க
தொடங்கிவிட்டால்
வாழ்கின்ற ஒவ்வொரு
நொடியும் நரகமே

ஒருவரிடம் இருந்து
கிடைக்கும் அன்பு
இறுதி வரை
கிடைக்குமாயின்
அது உறவு
அல்ல வரம்

நிராகரிப்பு உணர்ந்தவர்களுக்கு
மட்டுமே புரியும் இதன்
வலியும் வேதனையும்
மரணத்தை விட கொடியது

நாம் செய்யும்
சிறிய மாற்றங்களே
நாளை ஒரு பெரிய மாற்றமாகும்

நம்பிக்கையே மனிதனுக்கு
நேரும் சகல நோய்களுக்கும்
ஒரே மலிவான மருந்து

சிலரின் விருப்பங்கள்
வெளிப்படையானவை
எளிதாக அனைவருக்கும்
தெரிந்துவிடும்
சிலரின் விருப்பங்கள்
மறைமுகமானவை
அவ்வளவு எளிதில்
யாருக்கும் தெரியாது

இந்த வாழ்க்கை
உனக்காக
படைக்கப்பட்டது
அதை
மற்றவர்களுக்காக
இழந்து விடாதீர்கள்

நம் கடந்த காலத்தை
திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு கிறுக்குதனமாவா
இருந்தோம்னு தோணுது

குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்