சிரிப்பு போல எளிதான ஆயுதம் வேறொன்றும் இல்லை வாழ்க்கையில்
முயற்சியை நிறுத்தினால் தான் தோல்வி முயற்சி தொடர்ந்தால் அது வெற்றிக்கான சாலை
நிறைகளைப் பார் உன்னுள் நிறைந்து நிற்கும் மகிழ்ச்சி
தொலைந்ததற்காக அல்ல மீண்டும் பெற முடியாததற்காக தான் சோகமடைகிறோம்
நம்முள் இருக்கும் திறமையை நம்பும் மனமே வெற்றியின் கதவைத் திறக்கும் முக்கிய சாவி
எப்பவுமே நம்ம சந்தோஷமா இருக்க முடியாது ஆனா நம்ம கூட இருக்கவங்களையும் நம்மள நம்பி இருக்கவங்களையும் முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வச்சிருக்க முடியும் அதுவே நமக்கு அளவான சந்தோஷத்தை தரும்
பிறரின் உயரத்தை பார்க்கிறபோது நீயும் ஏற பழக வேண்டும்
வாழ்க்கையில் வரிசையாக ஏமாற்றங்களை சந்தித்ததால் புதியதாக வரும் துன்பமோ ஏமாற்றமோ துரோகமோ பெரிதாக பாதிப்பை தர போவதில்லை
முயற்சி செய்தவன் ஒருநாள் வெல்லாமல் போகலாம் ஆனால் முயற்சி செய்யாதவன் ஒருபோதும் வெல்லமாட்டான்
பொறாமை கொண்ட மனிதன் எப்போதும் வீணாக பேசுவான் ஆனால் உழைக்கும் மனிதன் வெற்றியில் பேசுவான்