வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை
அன்பின் செடியில்
என்றும் புன்னைகைப் பூக்கள்
மட்டுமே மலரும்
முயற்சி செய்யும்
மனம் கொண்டால்
சாதாரணம் கூட அசாதாரணமாகும்
குறை கூறும் பலருக்கு
உத்தமனாய் இருப்பதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
உண்மையாய் இரு
சிலர் காலத்திற்கு
ஏற்றார் போல்
மாற்றி கொள்வது
உடைகளை மட்டுமல்ல
உண்மையானவர்களிடம்
நடிக்கும் நடிப்பையும் தான்
தொலைத்தவனுக்கே
தேடுதலின் அருமை
இழந்தவனுக்கே
பிரிவின் அருமை
ஒவ்வொரு நிகழ்வாய்
வாழ்க்கை
ஏமாற்றி
கொண்டிப்பவர்களிடம்
தினமும் ஏமாறுவது போல்
நடிப்பதும் ஒரு அன்பு தான்
தோல்வி எனும் பாடம் இல்லாமல்
வெற்றி எனும் பரீட்சை எழுத முடியாது
வாழ்க்கை ஒரு கதை அல்ல
அதை எழுதுவது நீ தான்
நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி
நாளைய கனவுகளில்
மூழ்கி
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே
📖 பக்கம் 126 / 606
📋 Copied