எந்த போராட்டமும்
இல்லை என்றால்
வெற்றியும்
உனக்கு இல்லை

சிறிய முயற்சிகள்
சேரும்போது தான்
பெரிய வெற்றிகள்
உருவாகின்றன

நம்மை விட்டு
யாராவது பிரியும் போது
நமக்கு வலித்தால் அதில்
அவர்கள் காட்டிய
பாசம் தெரியும்
அப்படி நமக்கு
வலிக்கவில்லை என்றால்
அந்த உறவின் வேஷம்
தான் காரணமா இருக்கும்

தோல்வி நம்மை
தள்ளுவதே தவிர
நம்மை அழிக்க முடியாது

கனவுகள்
சிதறும் போது மட்டும்
உணர்வுகள் அழுகின்றன

மகிழ்ச்சியாக இருங்கள்
இங்கு எதுவும்
நிரந்தரம் இல்லை

வாழ்க்கை வழி காட்டாது
கேள்வி கேட்கும்
பதில் தேடும் கடமையோ நம்மதே

நிம்மதி வேண்டுமென்று
தேடுகிறார்களே தவிர
ஆசைகளை கைவிட
யாரும் நினைப்பதில்லை
ஆசைகளை துறந்து பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்

காலால் மிதித்த
தன்னை கையால்
எடுக்க வைக்கும்
பெருமை கொண்ட
முள்ளை போல
உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசும் வரை
உன் முயற்சியை
வடிவமைத்துக் கொள்

முடிவுகளை நினைத்து பயப்படாதே
முயற்சிகளை நினைத்து
பெருமை கொள்ளுவாய்