வாழ்க்கை சிறியது
ஆனால் அதில் செய்யக்கூடிய
நல்லவை அளவில்லாதவை

நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்

வாழ்க்கை என்பது
வெற்றி தோல்வியின்
கூட்டுத்தொகை அல்ல
மனம் அமைதியாக இருக்க
கற்றுக்கொள்ளும் பயணம்

வழியில் வந்தவர்களை
நேசிப்பதில்
கவனம் செலுத்துவதால்
வழி காட்டியவர்களை
மறந்துவிடுகிறோம்

சவால்கள் மேல்
சவாரி செய்வதே
வெற்றிக்கு வழி

உயர்ந்த கனவுகள் தான்
உன்னை உயர்த்தும்

அதிர்ச்சிகள் வாழ்க்கையில்
இடைவேளைதான் முடிவல்ல

விடியலின் அர்த்தம்
விளங்கவேயில்லை
நீயில்லா
பொழுதுகளில்

நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளும்
உங்கள் கடந்த நாளை விட
சிறப்பாக இருக்கட்டும்

ஊக்கம் என்பது
வெளியில் கிடைக்காதது
அதை உள்ளேயே வளர்க்க வேண்டும்