இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
உன் சொற்கள் எப்படி
இருக்கிறதோ அந்த
அளவுக்கு தான்
உனக்கான மதிப்பும் இருக்கும்
அழகான நினைவுகள்
இல்லாமல் வாழ்க்கை
ஓர் வெறுமை தேசம்
சில முற்றுப்புள்ளிகள்
முழு மனதுடன்
வைக்கப்படுவதில்லை
சில காலத்தின் கட்டாயம்
சில காயத்தின் கட்டாயம்
தன்னம்பிக்கைய
இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம்
கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான
தினமாக இருக்கலாம்
ஆனால்
நாளைய மறுதினம்
நிச்சயம் பிரகாசமாக இருக்கும்
நிம்மதிக்கான
இரண்டு வழிகள்
விட்டுக்கொடுங்கள்
இல்லையேல்
விட்டு விடுங்கள்
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி
எளிமையான வாழ்கை தான்
உண்மையான சுகம் தரும்
நீ போராடும்
ஒவ்வொரு வினாடியும்
உன் வெற்றிக்கு
அடித்தளமாக இருக்கும்
கண்ணீர் துடைக்க
யாரும் வராவிட்டாலும்
அதை துடைக்கும் வலிமை
நம்முள் தான் இருக்கும்
📖 பக்கம் 124 / 606
📋 Copied