போராடும் மனங்கள்
விடியலில் போர்வைக்குள்
ஒளிந்திருப்பதில்லை
புது விடியலை
புதுப்பிக்க காத்திருக்கும்
புன்னகையுடன்
இன்றைய நாளை
தொடங்குவோம்

யாரும் யாருக்காகவும்
உண்மையாக இருக்க
வேண்டிய அவசியமில்லை
தன் மனசாட்சிக்கு
உண்மையாக
இருந்தாலே போதும்

ஒருவரின் வெற்றி
உனக்கு ஏமாற்றமாக இருந்தால்
நீ இன்னும் உன்னையே
நம்பவில்லை என்பதற்கான சான்று

எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே

அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது

பொறாமை என்பது
ஒரு வீணான comparison
தானாகவே நம்மை
பின்வாங்கச் செய்கிறது

விழுந்த இடத்தை எண்ணாதே
மீண்டும் நிற்கும் தருணத்தை
நினைத்துப் பயணிக்க

மற்றவர் நம்மை வெறுப்பது
கூட தெரியாமல் ஏன்
என்கூட பேசல என்னாச்சு?
என்று கேட்கிற மனசு
தான் இங்கு அதிகம்

தோல்வியை பயமாக
நினைத்தால்
முன்னேற்றம் கூட
ஒரு கனவாகிவிடும்

காலம் அறிந்து
தேடுதல் தேவையானது
காலம் தவறிய
தேடுதல் தேவையற்றது