சில உறவுகள் தொலைந்து
போன பிறகு தான்
அவை நமக்கு
எவ்வளவு முக்கியமோ புரிகிறது
சில உறவுகள் தொலைந்து
போன பிறகு தான்
அவை நமக்கு
எவ்வளவு முக்கியமோ புரிகிறது
கோபம் அடைமழையாக
கொட்டித் தீர்த்தாலும்
அன்பு அது ஒரு ஓரம்
நின்று குடை பிடிக்கும்
வெற்றி தள்ளிப் போகலாம்
ஆனால் முயற்சி
வீண் போகாது
இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
கண்ணீர் வழியும் நேரம்
உள்ளத்தின் வலி சொற்களால்
சொல்ல முடியாத தருணம்
பல கடினமான
சூழ்நிலைகளுக்குப் பிறகு
ஈட்டிய வெற்றியை
நினைத்து பார்ப்பதை விட
கடந்து வந்த
கடினமான பாதைகளை
நினைவில் வைத்து செயல்படு
சுலபமாக வாழ்க்கையை
எதிர் கொள்வாய்
மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே
அடுத்தவர்
ரசிக்கும் அளவிற்கு
வாய் விட்டு சிந்தும்
புன்னகையில்
சொல்ல முடியாத
சோகங்கள் மறைந்தே
இருக்கிறது
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்
மற்றவர்களை
காயப்படுத்தாத
அனைவரையும்
சந்தோஷப்படுத்தும்
புன்னகை என்றுமே
சிறந்தது