சிறிய வெற்றிகள் கூட
பெரிய போராட்டங்களுக்கு
வழிகாட்டும்
பார்வை மோதிய நொடி
பாசம் பிறந்தது சொல்லாமலே
கிடைக்காமல்
போன இன்பங்களைவிட
தேடாமல்விட்ட
இன்பங்களே அதிகம்
சிநேகமான புன்னகை
நம்பிக்கை தரும் வார்த்தைகள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவைகள் போதுமே
ஒருவருடைய
இன்றைய நாளை
அழகாய் மாற்ற
சிந்திக்காமல் அள்ளி
வீசி விட்டு போங்கள்
அவர்கள் வளர்ச்சியில்
உங்கள் பங்கும் இருக்கட்டும்
பயம் கேள்வி தைரியம் பதில்
பேசிய அர்த்தமற்ற
வார்த்தைகளில்
இருப்பது அன்பு மட்டுமே
என்பதை உணர்ந்தால்
அன்பு நிலைக்கும் அதிலிலும்
அர்த்தம் தேடினால்
பிரிதலே தீர்வாகும்
நாளையதை எதிர்நோக்கும்
மனம் தான்
இன்றைய வாழ்வின் சக்தி
முடிவுகளை நினைத்து பயந்தால்
வாழ்நாள் முழுவதும்
தொடங்க முடியாது
உங்களை பலவீனப்படுத்தும்
யாரொருவரின் அன்பிலும்
தேங்கி விடாதீர்கள்
அதுவே பின்
மீளவே முடியாத
ஒரு போதையாகிவிடும்
தோல்வியால் சோதிக்கப்படும் போது
வெற்றிக்கு நெருக்கமாக இருக்கிறோம்
📖 பக்கம் 120 / 606
📋 Copied