நாளைய நம்பிக்கையுடன்
இன்றை வாழ்வதே
உண்மையான ஆனந்தம்

கஷ்டம் கூட
இஷ்டம் ஆகிவிடுகிறது
ஆதரவாய் உன் தோள்
சாய்கையில்

கவலைப்படுவதால்
மனதின் ஆற்றலும்
உயிரின் சக்தியும்
வீணாகிறது
எதிலும் அளவறிந்து
வாழப் பழகினால்
சிக்கலுக்கு இடமிருக்காது

பொறாமை கொண்ட மனசு
பயிற்சி இல்லாத வீரனுக்கு சமம்

ஒன்றை விட்டு
விலகுவதற்கு
முன் அதை ஏன்
தொடங்கினோம்
என்று யோசி

சோகமான நிமிடங்கள்
நம்மை வலிமையாக்கும் பயிற்சிகள்

நம் முன்னேற
அடுத்தவரை விழுங்கி
முன்னேற நினைக்காத
உன் வாழ்நாளில்
துன்பத்தை தந்து
தூக்கத்தை இழக்க
நேரிடும் பிற்காலத்தில்

தாழ்வு எண்ணம்
தோன்றும் போதெல்லாம்
கடந்த சாதனைகளை நினை

வெற்றி என்பது
பாதையில் கிடைக்கும்
கல் அல்ல வழியை
செதுக்கி கட்டும் நெறி

சிரமமான பாதையில்தான்
வலிமையான வெற்றி இருக்கிறது