தலைக்கனம் இருப்பதால் தான்
என்னவோ தட்டி
இருக்கப் படுகின்றன ஆணிகள்
உன் திறமைகளை
உலகம் அங்கீகரிக்கட்டும்
என்று காத்திருக்காதே
நீயே உன் உழைப்பால்
உன்னை செதுக்கி
உன் ஒளி வீசட்டும்
ஒரு சூழ்நிலை
உன்னை பாதிக்காது
அதற்கு நீ கொடுக்கும்
முக்கியத்துவமே
உன்னை பாதிக்கும்
கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம் வீட்டுப்பிரச்சனைகளையும் தான்
அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன்
செய்தால் வெற்றி
நம்மை தேடி வரும்
நாம்
எந்த இடத்தில் இருக்கிறோம்
நமக்கான பொறுப்புகள்
என்ன என்று
உணர்ந்தாலே போதும்
வாழ்க்கையில் தெளிவும்
நற்பெயரும்
விரைவில் கிடைக்கும்
சில துரோகங்கள்
வலியை விட
விழிப்புணர்வை
அதிகம் தருகின்றன
தனிமையில் இருக்கிறாய்
என்பதை நினைத்து
தளர்ந்து விடாதே உனது
பலம் தனிமைதான்
தோல்வியை
நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி
📖 பக்கம் 112 / 622
📋 Copied