இந்த உலகமே
உன்னை திரும்பி
பார்க்க வேண்டுமென்றால்
நீ யாரையும்
திரும்பி பார்க்காதே

நீ வெற்றிபெற வேண்டுமெனில்
செவிடனாய் இரு

நம்மால் நேற்றை
சரிசெய்ய முடியாது
ஆனால் நாளையை
உருவாக்க முடியும்

படிக்க படிக்க
சுவாரிஸ்யம்
இல்லாமல் போவது
புத்தகம் மட்டுமல்ல
இன்று மனித
மனங்களும் தான்

உன் வாழ்க்கையில்
தன்னம்பிக்கையும்
மன தைரியமும்
இரண்டையும்
வளர்த்துக்கொண்டாலே
எதற்கு அஞ்சாமல்
துணிந்து வெற்றி
அடையும் வரை
போராடிக் கொண்டே
இருப்பாய்

ஒவ்வொரு விழிப்பும்
புதிதாக எழுதும் ஒரு பக்கம்
முடித்துவைக்காத புத்தகத்தில்

நாளைய வெற்றிக்கு
முதல் படியாக
இன்றைய முயற்சியை கருதுங்கள்

ஆரம்பம் எவ்வளவு
சிறியதாக இருந்தாலும்
முயற்சி பெரிய கனவுகளை
அடைய வைக்கும்

முன்னேறும் பாதை
காணாமல் இருந்தால்
உன் நிழலை விசாரிக்கவும்

சில இதயங்கள் உடைந்தால் கூட
அவை யாருக்குமே தெரியாது
ஏனெனில் சிரிப்பின் பின்னால்
அவை மறைந்திருக்கும்