ஒரு சின்ன முயற்சி கூட
சில நேரங்களில்
வாழ்க்கையை மாற்ற முடியும்

தவறான வுழியில்
வரும் பணம்
தவறாமல்
துன்பத்தைத் தரும்

பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்

வீழ்ந்தாலும் மீண்டும்
எழுந்து மரங்களாக
உயர்ந்து காட்டுகிறது
விதை

கடல் போல
பெரிய சந்தோஷங்கள்
தேவையில்லை
கால் நனைக்கும்
அலை போல
சின்ன சின்ன
சந்தோஷங்கள் போதும்

இயற்கையின் மடியில்
அவ்வப்போது வந்து
இளைப்பாறுகிறது
இடியும் மின்னலும்

சந்தோஷமா இருக்கறது
கெத்து தான்
ஆனா சந்தோஷமா
இருக்கற மாறி
நடிக்கிறது
அத விட கெத்து

உன்னை
நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும்
பயணம்
ஒரு அற்புதமான வழி

உனது கனவுகளை
நீ நனவாக்க தவறினால்
பிறர் அவர்களது கனவுகளை
நிறைவேற்ற உன்னை
பயன்படுத்திக்கொள்வார்கள்

எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வரும் போது தான்
மனம் இலகுவாகிறது