கண்ணீர் சொல்வது
வார்த்தைகளால்
சொல்ல முடியாத கதைகளை

எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாமே
சத்தியம் தான்

ஒரு நொடி துணிவே
ஆயுள் முழுக்க
மாற்றத்தைத் தரும்

எப்பொழுதும்
மனதை மகிழ்ச்சி
பொங்க வைத்திருங்கள்
சிறு கவலையும் பாதிக்காது
பெரும் துன்பமும்
கடந்து விடும்

பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்

வாழ்க்கை சிரமமா இருந்தாலும்
நடக்காமலே நின்றுவிடாதே
காற்றே போல் நகர்ந்து விடு

பிறரது வெற்றியைப் பார்த்து
பொறாமை கொள்வதற்குப் பதிலாக
நீயும் உன் வெற்றியை உருவாக்கு

உனது பயணம்
எப்படி தொடங்கியது
என்பதற்கில்லை
அதை எப்படி முடிக்கிறாய்
என்பதற்கே மதிப்பு

வாழ்க்கையில
ஓண்ண விட
இன்னொன்று
பெட்டரா தான் இருக்கும்
கிடைக்கிறத
வச்சிகிட்டு தான்
சந்தோஷமா வாழனும்

காயப்படுவதற்குப் பழகுங்கள்
உங்களுக்காக நிறைய போலி
நபர்கள் காத்திருக்கிறார்கள்