உளி படாத கல்
சிலையாவதில்லை
வலியில்லாத வாழ்க்கை
வளமாவதில்லை

வெற்றியாளனை விட
பொறாமையுள்ளவரே
அதிகமாக யோசிப்பார்

வெட்கமும்
விடை பெறுகிறது
உன்னிடத்தில்

அகரம் இப்போ சிகரம் அச்சு

நீ அமரப்போகும்
நாற்காலியைச்
செதுக்கும்
விஸ்வகர்மா
உன் கல்வி

ஒரு தோல்வியில் இருந்து
கற்றுக்கொண்டால்
அந்த தோல்வியும் வெற்றிதான்

சிரிப்பு இல்லாத நொடி
காலம் ஓடாத ஒன்று போல

கிடைத்த வாழ்க்கையை
ரசித்து வாழத் தெரிந்தால்
அந்த வாழ்வுக்குப் பெயர்
தான் அழகான வாழ்க்கை

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே
இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

நம்பிக்கை உடையவர்கள்
எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்