✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது
சிலவற்றை சந்தோஷங்களாக
சிலவற்றை சங்கடங்களாக
content_copy
உலக மலர்களின் அழகை
ரசிப்பதற்கு இங்கும் அங்கும்
பறந்து ஆனந்தமாக பவனி
வருகிறது வண்ணத்துப்பூச்சிகள்
content_copy
வாழ்க்கையில் எல்லோரும்
நமக்கு சூரியன் போல
ஒளியளிக்க மாட்டார்கள்
சிலர் நிலவைப் போல்
இருளில் வழிகாட்டுவார்கள்
content_copy
வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது ஆனால்
வலிக்கவே இல்லை என்பதை
போல் சிரிக்க வேண்டும் என்ற
சூழ்நிலை தான் வலிக்கிறது
content_copy
வாழ்க்கையின்
மிக சிறந்த பொக்கிஷம்
சரியான நேரத்தில் கிடைக்கும்
ஆறுதலும்
மாறுதலும் தான்
content_copy
பிடிவாதம் கொண்ட
எந்த பெண்ணின் கர்வமும்
உடைந்து போகும் தனக்கு
பிடித்த ஆணுக்காக
content_copy
உன்னை வெறுக்கும்
மனிதர்கள் கூட
உன்னிடம் இருந்து
ஏதாவது கற்றுக்கொள்கிறார்கள்
content_copy
ஒரு போலி வாக்குறுதியை விட
தெளிவான நிராகரிப்பு
எப்போதும் சிறந்தது
content_copy
மனசு உடைந்த பிறகும்
சிரிக்கக் கற்றுக்கொண்டால்
அதுவே வலிமை
content_copy
நிலவுக்கும் ஒரு நாள்
விடுமுறை உண்டு ஆனால்
உன் நினைவுக்கு என்றும்
விடுமுறை இல்லை
📖 பக்கம் 108 / 606
arrow_back
arrow_forward
📋 Copied