கத்தி என்று தெரிந்தும்
கால்தடம் பதித்தவர்கள்
தான் இன்று காலத்தை
கை பிடியில் கசக்கி
வைத்திருக்கிறார்கள்
கத்தி என்று தெரிந்தும்
கால்தடம் பதித்தவர்கள்
தான் இன்று காலத்தை
கை பிடியில் கசக்கி
வைத்திருக்கிறார்கள்
பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை
தோல்விக்குப் பின்னாலும்
நம்மை நேசிப்பவர்கள் தான்
உண்மையாய் இருப்பவர்கள்
நிம்மதியாக வாழ்வது
ஒரு வெற்றி
எல்லாராலும் முடியாது
வெற்றி உச்சியை அடைந்தபின் கூட
எளிமை தான் உன்னை
நிலைத்திருக்கச் செய்யும்
எட்ட வரும் வாய்ப்புகள்
ஏற்றிச் செல்லும் வரை
காத்திருங்கள் பயணங்கள்
பாதைகளாக மாறும்
தோற்றாலும்
நம்பிக்கையோடு இரு
ஆனால் யாரையும் நம்பி
தோற்றுவிடாதே
இழப்பை ஏற்றுக்
கொள்பவர்களுக்கு
மட்டுமே
இந்த உலகம் வாழ
கற்றுக் கொடுக்கும்
விழுந்த இடத்தில்
நின்றால் தோல்வி
எழுந்தால் வெற்றி
சொற்களில் முரண்பாடு
ஏற்பட்டாலும்
உன் மேல்
நான் கொண்ட
அன்பு மட்டும் மாறாது