எதையும்
சொல்ல தயங்காத மனமும்
எதையும் ஏற்கும் பக்குவமும்
இருந்திட்டா
இந்த வாழ்வை
இனிதா கடந்திடலாம்
எதையும்
சொல்ல தயங்காத மனமும்
எதையும் ஏற்கும் பக்குவமும்
இருந்திட்டா
இந்த வாழ்வை
இனிதா கடந்திடலாம்
சோகத்திலும்
இன்பத்திலும்
பிரியாமல்
பிரியமாக இருக்கும்
உறவே போதும்
வாழ்க்கை
சிறப்பாக இருக்கும்
நம் வெற்றி
நம்மேல் பொறாமை
உள்ளவர்களை
ஆத்திரப்படுத்தும்
நம்மை தாழ்வாக
நினைத்தவர்களை
ஆச்சரியப்படுத்தும்
நம் மீது உண்மையான
அன்புள்ளவர்களை
ஆனந்தப்படுத்தும்
ஒரு புத்தகத்தின்
பக்கம் மாறுவது போல்
வாழ்க்கையில்
புதிய அத்தியாயத்தை
தொடங்குங்கள்
புதிய காலம்
உங்களுக்காக காத்திருக்கிறது
பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா(தூ)ங்காது
உங்களது கண்ணீரை
யாரும் அறிவதில்லை
உங்களது வலிகளை
யாரும் உணர்வதில்லை
உங்களது இழப்புக்களை
யாரும் தேடியதில்லை
இவர்கள் தான் உங்களின்
குற்றங்களை மட்டும்
பட்டியலிடுவார்கள்
ஒப்பிடாதே
போட்டியுமிடாதே
நீ தனித்துவமானவன்
நேர்மையான வாழ்க்கை
மிக எளிதாக இருக்காது
ஆனால் அதன் அமைதி
எந்த விதமான செல்வத்தாலும்
வாங்க முடியாது
இருக்கிறத வச்சுட்டு
சந்தோசமா இருக்கனும்
அட்வைஸ் பன்னுறாங்க 😀
நம்ம கிட்ட இருக்கிறது
பிரச்சினை மட்டும் தான்
அதை வச்சிட்டு எப்படி
சந்தோசமா இருக்கிறது 😁
பார்வையை மாற்றினால்
வாழ்க்கையும்
புதிதாகத் தெரியும்