ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்

உன் சொற்கள் எப்படி
இருக்கிறதோ அந்த
அளவுக்கு தான்
உனக்கான மதிப்பும் இருக்கும்

வேடம் போட்டால்
நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால்
பைத்தியக்காரன்
அன்பு காட்டினால்
ஏமாளி
எடுத்து சொன்னால்
கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்

சில விசயங்களை
எளிதில் மறந்துவிடும்
பாக்கியம் எல்லோருக்கும்
எளிதில் கிடைப்பதில்லை

சிரிப்பும் கண்ணீரும்
ஒரே நேரத்தில்
பகிரக்கூடிய உறவு நட்பு
வாழ்வின் அனைத்துக் குறைகளை
மறக்கும் ஓர் அரிய செல்வம்

கனவுகள் கலைந்தாலும்
நினைவுகள் அழகு
கற்பனைகள் தீர்ந்தாலும்
காதல் அழகு

ஏதோ ஒன்றின் மீது
வைக்கப்பட்ட முழுமையான
நம்பிக்கை உடைபடும்
போது தான்
இனி எதுவுமே
தேவையில்லை
என்ற நிலைக்கு
வந்து விடுகிறது மனம்

மதத்தை வளர்த்தால் மதம்
பிடிக்கும் மரத்தை வளர்த்தால்
காய்

நான் எடுக்கும் முடிவு
சரியானதா என்று
எனக்குத் தெரியாது
ஆனால் எடுத்த முடிவை
நான் சரியாக்குவேன்

நாளைய வெற்றிக்காக
இன்றைய அமைதியை
விட்டுக் கொடுப்பது
தவறு இல்லை