பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே

உன்னருகில்
மௌனம்
பேரழகு...

காதல் என்பது
இருவருக்கிடையிலான
ஒரு அழகான உறவு
அன்பு என்பது
அந்த உறவின் அடிப்படை

மறந்திருந்தாலும்
மயக்குகிறாய்
மயிலிறகாய்
வருடி மனதை

இதயம் ஒருமுறை இணைந்தால்
பரிசுகள் தேவையில்லை

என் இதயம் துடிக்கிறதோ
இல்லையோ நன்றாக
நடிக்கிறது உன்னை
மறந்து விட்டேன் என்று

கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...

நாணத்தில்
தலை சாய்கிறது
மயிலிறகு மெல்ல
நீ மனதை வருட
நினைவால்

தொட்டு பேசாத அந்த ரேகைகள்
உயிரோட்டமாய் மனதை சுழற்றும்

நீயும் நானும் தொலை
தூரமாய் காதலை
தொலைத்தே வாழ்கின்றோம்