பார்த்த முகம்
மறந்து போகலாம்
ஆனால் பழகிய இதயம்
ஒரு போதும் மறந்து போவதில்லை

நேரம் எதுவாக இருந்தாலும்
என் காதல்
உன் நினைவுகளில்
ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

நீ புன்னகை காட்டி
நடந்து வரும் வீதியெங்கும்
உள்ள பூக்கள் கூட
தலை கவிழ்ந்து கொள்ளும்
உன் இதழ்களோடு
போட்டியிட முடியாமல்

திரும்பி பார்ப்பதும்
விரும்பி கேட்பதும்
உன் பெயர்
ஒலிக்கும் போதே

தூரமாய் இருப்பதும்
ஒரு காரணம் தான்
உன் மீது உள்ள
அளவில்லா அன்பை
அறிந்து கொள்ள

ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்

மூச்சை அடக்க முடியாத
அந்த கணம்
இருவரும் காலத்தை
மறந்த நேரம்

மறந்து போன
ஞாபகங்கள்
துளிர் விடுகிறது
நீயாக

யார் வலிகள்
தந்தாலும்
அனைத்துக்குமான
மருந்து
நீ மட்டுமே
எனக்கு

நான் உன்னை கண்டபோது
காதலின் அர்த்தத்தை உணர்ந்தேன்