என் இதயத்தில் வாழாமல்
இதயமாகவே வாழ்ந்து
கொண்டிருக்கும் என் உயிரே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

பல முறை
தோற்று போனது பிரிவு
நம் பிரியத்திடம்
நம்மை பிரிக்க நினைத்து

தொலைவில் இருந்தாலும்
மனதுக்கு நெருக்கமாகவே
சில உறவுகளின் நினைவுகள்

நீ தொட்டு சென்ற
வெட்கத்திலும் விட்டு
சென்ற மிச்சத்திலும்
சிக்கித் தவிக்கிறது
என் நாணம்

நேசிக்கும் மனது
அசையாமல் நிலைத்தால்
காலமும் அந்த காதலை
விட்டு செல்ல முடியாது

சிரிப்பில் ராகம்
மௌனத்தில் கவிதை
அவளை பார்ப்பதே
ஒரு காதல் பரிசு

உன் நினைவுகளுக்கு
உருவம் கொடுத்தால்
உலகின் அழகிய
சிலை நீதான்

காற்றுக்கும்
வழி விடாதே
கலைத்து விடும்
காதலை
பற்றிக்கொள் இறுக

மௌனத்தின் மொழியில் மட்டுமே
ரொமான்ஸ் முழுமை பெறுகிறது

தோளில் சாயும் கணம்
காதலாகத் தொடங்கும்
அதில் உலகமே மங்கி விடும்