கட்டுப்பாடு விதிக்கா
உன் நேசத்தில்
கட்டுண்டு கிடக்கும்
என் காதலும்
காலமெல்லாம் என்னன்பே

வாழ்வின் வரம்
உன்னுடன்
நகரும் நிமிடங்கள்

நான் ஆசை
படுவதெதுவும்
நிராசையானதில்லை
உன்னாசைகள்
எனக்காக என்பதால்

மாட்டி விட்டாய்
வளையல்களை
மனமும்
மாட்டி கொண்டு
சல சலக்குது
உன்னிடம்

ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே
நாடகம் போலே
நாட்கள் போகுதே

நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே

மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென

உன் உளறல்கள்
உணர்ந்தும் உணறாமல்
அறிந்தும் அறியாமல்
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டும் காதலில்
அழகிய அவஸ்த்தை தான்

காதல் என்பது
ஒரு கண்ணியமான நிலை
அது வேதனையை
பூவாக மாற்றும்
சிறப்பான விலைமதிப்பற்ற சக்தி

இடைவிடாது பேசும்
உன் இதழ்கள் அழகென்றால்
இடையிடையே பேசும்
உன் விழிகள் பேரழகு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே