விரல்களால் எழுத முடியாத காதலை
பார்வை சிறப்பாய் எழுதிவிட்டது

எப்போது நீ அருகிலிருப்பாய்
எனது உலகம்
ஒரே நொடியிலேயே
அழகானதாக மாறிவிடுகிறது

நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்
காதல் மழையில் நனையும்
சிறு குழந்தையாகி
விடுகிறேன் நான்

காற்று போல நுழைந்து
ஓராயிரம் நினைவுகளாகக் கலந்துவிட்டாய்

முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...

ஒரு புன்னகை மட்டுமே போதும்
நாளைய கனவுகளை நிறைவேற்ற
பயணம் தொடங்குவதற்கு

தொலைந்திருக்கவே
பிடிக்கும்
இந்த மனதுக்கு
உன்னில் நானாகி
என்றும் காதலுடன்

என்னில் வைக்கும் அன்பை
மிஞ்ச எவரும் இல்லை
உன்னை விட அதனாலேயே
உன்னை கெஞ்சி நிற்கிறேன்
என்னை காதலி என்று
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலா

பற்றிக்கொண்டேன் கையை
கொடுத்தாய் நம்பிக்கையை
எதுவான போதும்
நொடியேனும் பிரியேனென்று