இதயம் ஒரு பக்கம் துடிக்கிறது
அந்த பக்கம் அவளது
நினைவு நிறைந்தது

என் மனக்குழப்பத்தை
முதலில் தெளிவுப்படுத்து
பின்பு எனக்கான
உன் படைப்பை
தெரியப்படுத்து

உன் பார்வையிலிருந்து
மறைந்து கொண்டாலும்
காட்டி கொடுக்கிறது
நாணம் நானும்
உன் நினைவில்
மூழ்கி கொண்டிருப்பதை

உன் முகம்
காணாவிடின்
என் மனமும்
தேய்பிறையே

ஊடலின்
விரிசலை
காதலில்
நெய்கிறாய்

புன்னகையின் பின்னால்
இருக்கும் கவலைக்கே பதில்
அவன் பார்வை

அருகாமையில் உள்ள காதல்
எல்லாம் சேர்வதுமில்லை
தொலைவில் உள்ள காதல்
எல்லாம் பிரிவதுமில்லை

விழி காணும்
பிம்பம் நீயென்றால்
இமைக்காமல்
ரசித்திருப்பேன்

பல நேரங்களில்
ஒளியாய்
சில நேரங்களில்
தூசியாய்
என் விழிகளில்
மாற்றத்தை
ஏற்படுத்துகிறாய்

நம் மௌனத்தில் கூட
காதல் பேசுகிறது
அதை உணர்ந்தால் போதும்