குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து
குடையோடு
பயணித்தாலும்
நிழல் தருவது நீயே
என் மனதுக்கும்
நினைவாக தொடர்ந்து
வார்த்தைகள் இல்லாமலே
காதல் வாழ்க்கை பேசுகிறது
நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
நேரில் பார்க்க ஆசை
பார்க்க முடியவில்லை
கண்கள் இரண்டும்
உன்னையே தேடுகிறது
சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத போது
ஏதேதோ
சொல்ல நினைத்து உன்னிடம்
சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி
உன்னைக் காணாத நொடிகளில்
நான் இருண்டு போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்
கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன்
மௌனம் கூட அவளுடன்
ஒத்திசைவு கொள்ளும் போது
குளிர் கூட சூடாகிறது
மொத்த காதலும்
நிரம்பி தளும்புது
உன்னிதழ்
பட்ட தேனீரில்