கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்
உனக்கும்
தான் எத்தனை
சுயநலம்
என்னை மறந்து
உனையே
நினைக்க வைத்து
விட்டாயே நினைவாகி
தனிமை பிடிக்கும்
நமக்கான உலகில்
சிறகடித்து பறப்பதால்
மனம்
இரவில் பேசும் மௌனம் தான்
காதலின் உண்மையான மொழி
புன்னகை ஒரு துளி தான்
ஆனாலும் உயிரின்
பாலைவனத்தில் மழையாகும்
கொட்டி தருகிறாய்
நேசத்தை
அள்ளி கொள்ள தான்
ஆயுள் போதவில்லை
பிரிந்தால் பறந்திடும்
உயிரென்றே
பற்றிக் கொள்கிறேன்
உனை மனதுக்குள்
என்னவா
பெயர் சொல்லாமலே
மனதை அழைக்கும்
ஓர் உணர்வு தான் காதல்
திருப்பியும் திருப்பியும்
நினைக்க வைக்கும் ஸ்பரிசம்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது
அணைத்துக்கொண்ட
அந்த நொடியில்
உலகமே மறைந்து போகிறது