கண் மூளும் தருணத்திலும்
அருகிலிருக்கும்
நபரின் சுவாசம் மட்டுமே
உணரப்படுகிறது
என்னிடம் பேச
காத்திருக்கிறாய் நீ
உன்னிடம்
என்ன பேச வேண்டும்
என்று யோசித்து கொண்டே
இருக்கிறேன் நான்
நமக்காக காத்திருக்கிறது காலம்
நாம் இருவரும் பேச போகும்
அந்த அழகிய தருணங்களுக்காக
இதழ்கள் என் மீது தடவப்படும்
ஒவ்வொரு கணமும்
தீயில் கரையும் மெழுகு போல
என்னை மாற்றுகிறது
காதலின் வலிமை
கைகளால் அளவிட முடியாது
ஆனால் மனதால் உணரலாம்
தொட்டுச் சென்ற கைகளும்
தொலைவிலே விட்டுவிட்ட
நினைவுகளும்
காதல் அதைத்தான் சொல்கிறது
விழிகளுனை
கண்டுவிட்டால்
மனமும்
ஏனோ பறக்கின்றதே
சிறகடித்து
வண்ணத்துப்பூச்சியாய்
பாசம் சில நேரம்
மௌனமாகவே பேசும்
ஆனால் அதுவே மிக ஆழம்
ஒரு சிரிப்பே
சில நேரம் மனிதரை
நம்முடைய உலகமாக ஆக்கிவிடும்
மூச்சு அருகில் நின்றால்
காலம் கூட சற்று தயங்குகிறது
இருள் நிறைந்த இரவில் கூட
அவள் நினைவு ஒளியாக மாறியது
💖 பக்கம் 79 / 478
📋 Copied