இரவு பேசும் மொழி
காதலின் நிசப்த காமத்தில்
வெளிப்படுகிறது

வாழ்க்கை
வெறும் கனவோ
என்றிருந்தேன்
நீயும் வந்தாய்
கலையாத
வண்ண கனவாய்

ஆனந்தமோ ஆதங்கமோ
என் கண்ணீரும்
உனக்காக மட்டுமே
எப்போதுமே

எனக்காக
எழுதும் பேனாவாய்
இருந்த
நான் உனக்காக
கரையும் மையாகி
போனேன்
உன்னில் தொலைந்த
பின்னே

மௌனத்தை மூடியது
ஒரு முத்தம்
அதற்குள் கதைகள் நூறாயிரம்

தொட்டதிலிருந்தே
உயிர் நடுக்கிறது
அது காதலா
ஏக்கமா எனத் தெரியவில்லை

நேரம் போதுமானதல்ல
உணர்வு இருக்கிற இடத்தில்
காதல் பூக்கும்

நீ இல்லாத
ஒரு உலகம் இருந்தாலும்
என் இதயம் வாழ்வதற்கு
உன் நினைவுகளே போதும்

இத்தனை மெனக்கெடல்
எதற்கு
ஒரு நொடியென்
விழிகளை வாசித்தால்
மன ஏட்டை
புரிந்து கொள்வாயே

முத்தம் தான் நீ கொடுக்கும்
தண்டனை என்றால் எப்போதும்
தவறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்