வேண்டுதல்கள்
என்று எதுவுமில்லை
உன் தரிசனத்துக்காகவே
அர்ச்சனை

மென்மையான மூச்சின் இசை
இரவில் மட்டும்
காதலை கொஞ்சும் லயனம்

காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்

ஊடலிலும்
தேடலிலும்
ஊடுருவி
கொ(ல்)ள்கிறாய்

நீயும் நானும் ஒன்றாக இருக்கும்
தருணம் தான் இந்த உலகின்
மிக அழகான கவிதை

காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே

இன்னும் நீண்டாலென்ன என்று
தோன்றாமல் இருப்பதில்லை
நம் பிரியமானவர்களோடு
இருக்கிற நொடிகளில்

விலகல்
நான் வெறுக்கும்
வார்த்தை
உன் நே(சுவா)சத்தில்
நெறுக்கத்தில்

காதல் என்பது
இதயம் கூறும் கவிதை
அதை உணர்வதற்கே
ஒரு உயிர் போதும்

தொல்லைகள் செய்தே
கொள்ளையடிக்கிறாய்
மனதை அழகாய்