உன் கைகள் மட்டும்
என்னை ஓரு உலகத்திலிருந்து
இன்னொரு உலகத்திற்கு
அழைத்துச் செல்கிறது
உன் கைகள் மட்டும்
என்னை ஓரு உலகத்திலிருந்து
இன்னொரு உலகத்திற்கு
அழைத்துச் செல்கிறது
நட்சத்திரங்களின் ஒளியை விட
கண்களின் ஒளியே
அதிகம் கவர்கிறது
தூரம் வெறும் அளவல்ல
உணர்வுகள் பேசாமலிருந்தால்
அது காதலுக்கே நிழல்
மழைத் துளி கன்னத்தில்
விழுவது போல
காதலின் நினைவு
இதயத்தில் விழுந்தால்
நெஞ்சம் மலர்ந்து விடும்
நீ ஒற்றை வார்த்தை
பேசினாலும்
அது என் இதயத்திற்குள்
இசையாக மாறும்
கடந்து
போகும்போதெல்லாம்
காதலை கலந்தே
போகின்றாய்
கண்களில்...
உன்னோடு கரையும்
நேரங்களில்
வாழ்க்கையும்
அழகுதான்
சுவாசத்தின் ஓசையில் கூட
காதல் ருசிக்கலாம்
ஆசை உணரலாம்
கதை பேசிக்கொண்டே வா
காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
உன் மௌனங்கள் பேசும்
தாயை காண
காத்திருக்கும்
குழந்தையாய்
உன் வழி
நோக்கி
என் விழிகளும்
காத்திருக்கு