நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும்

காதல் ஒரு மழைப்பொழிவு
ஆனால் அது தொடும்போது
மட்டும் தெரியாது
நமக்கு பூரணமாக
நனைந்த பிறகு தான்
உணர முடியும்

மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று

மனைவிக்கு
எப்போதும் இருக்கும்
கோபம் தன் கணவனை
பற்றியதாக மட்டும்
தான் இருக்கும்

நீ கொட்டி தீர்த்த
வார்த்தைகளை
மிச்சப்படுத்தி
ரசிக்கின்றேன்
உன் அடுத்த
அழைப்பு வரும் வரை

உன் வாசனையே ஒரு போதை
அந்த நெருக்கம் ஒரு புதையல்

இருவர் தூரத்தில் இருந்தாலும்
இதயத் துடிப்பில்
ஒன்றித்தான் இருப்பார்கள்

பிடித்தவர்கள் எல்லாம்
அருகில் இருந்து
விட்டால் நினைவுகளுக்கு
என்ன மரியாதை?

நீ அருகில் இருக்கும்போது
என் இதயம்
இசை போல துள்ளிக்கிறது

ஊடலை கூட
காதலாய் மாற்றும்
மாய வித்தை
எங்கிருந்து
கற்றாயோ கள்வனே