💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் மௌனம்
ஒரு அழகான சிறை
அதில் ஆயுள் கைதியாக
வாழ்வதையே
என் இதயம் விரும்புகிறது
content_copy
உனக்கு எங்கிட்ட பேச
புடிக்கலன்னு தெரியும்
ஆனா என்னால தான்
உன்னோட குரல
கேக்காம இருக்க முடியல
content_copy
சந்தோச தென்றல்
சன்னல் வழியே
சாமரம் வீசினாலும்
புலம் பெயர்தலின் வலி
பூக்கள் மட்டுமே அறியும்
content_copy
இதயம் அறியாமலே
சிலரை வழிபட ஆரம்பிக்கிறது
content_copy
நினைவல்ல என்
நிழலும் உயிர்
கொள்ளும் அவள்
விழி கொல்ல
content_copy
தானாய் மலரும்
பூவாய் நீயும்
மலர்ந்தாய்
என் இதயத்தில்
என்றும்
உதிரா (சு)வாசமாய்
அழகாய்
content_copy
கோடி விண்மீன்கள்
நடுவே தனித்துத் தெரியும் நிலவு போல
கோடிக் கூட்டத்திலும்
என் கண்கள்
தேடுவது உன்னை மட்டுமே
content_copy
உன்னை காதலிப்பது
என் இதயத்தின்
முடிவில்லா கவிதை
content_copy
உன் பார்வையில்
தொலைந்தது நான்
மட்டுமல்ல என்
கோபங்களும் தான்
content_copy
மாலை நேர வானம் சாய்ந்தபோது
காதல் நிறம் மனதில்
பரவி ஆனந்தம் தருகிறது
💖 பக்கம் 61 / 478
arrow_back
arrow_forward
📋 Copied