தொட்ட இடங்களில்
வாசகங்கள் இல்லை
கவிதைகள் எழுந்தன
தொட்ட இடங்களில்
வாசகங்கள் இல்லை
கவிதைகள் எழுந்தன
நம் காதல்
ஒரு மழை போல
தொடும்போது இன்பம்
இல்லாத போது ஏக்கம்
நெருப்பை தொடுவதுபோல் ஒரு பார்வை
ஆனாலும் மீண்டும் மீண்டும்
அதில் கரைய விரும்பும் மனது
வழியில்லை என்றாலும்
வார்த்தையில்லாத காதல்
பயணிக்கிறது
மௌனத்தில் மறைந்திருக்கும் ரசனைகள்
காதலை ஓரளவாக அல்ல
ஆழமாக உணர வைக்கின்றன
தோளில் சாயும் கணம்
வாழ்நாள் முழுவதும்
மறக்க முடியாத
கவிதையாக மாறுகிறது
உன் கண்களின் உவகை
என்னை கவிதையாக மாற்றுகிறது
உன்னைத் தவிர
வேறெதுவுமேயில்லை
என் நினைவிடம்
கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்
என் இதயத்தின் இசை நீ
ஒவ்வொரு நொடியும் உன் பாடல்