மடியில் தலை வைத்து
உறங்கும் கனவுகள்
இன்று அவளின் மார்பில்
உயிர்பிழைக்கும் யதார்த்தம்

கைகளைப் பிடித்து விடும்
தருணம் இல்லை என்றாலும்
மனதை பிடித்துவிட்டாள்

கனவில் மட்டும்
வருவாய் என்று நினைத்தவள்
கண்களை மூடச் சொல்லவைத்தாள்

விழிகளால் தொடும்
நேரங்களில்
விரல்கள் கூட
பொறாமை படும்

ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்

யார் கூட இருக்கமும்னு
நினைக்கிறோமோ அவங்க
தான் நம்மை விட்டு சீக்கிரமா
விலகி போய்டுவாங்க

காற்றில் கூட
ஈரத்துவம் தேடும்
அந்த தருணம்
தீவிர ஆசையின் அடையாளம்

விழிகளால்
கட்டி போட்டு
விலகிடாதே
என்கிறாய்

நீ எவ்வளவு அழகென்பதை
உனது கண்ணாடிகள் சொல்லி
இருக்கும் இருந்தும் நான் எப்படி
இருக்கேன் என என்னோடு
நீ சரி பார்த்துக் கொள்ளும்
போது இன்னும் நீ அழகு

தூரம் எதுவாக இருந்தாலும்
மனதின் அருகில் ஒருவரை
வைத்திருப்பது காதலின் ராகம்