தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்
முத்தம் விழும் இடம் உதடானாலும்
உணர்வு விழும் இடம் இதயம்தான்
என் சந்தோஷத்தை விட
உன் சந்தோஷம் தான்
முக்கியம் எனக்கு
காற்றில் கூட
உன் நறுமணத்தை தேடுகிறேன்
அது என்னைக் கவர்கிறது
மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா
சிலரின் குரல் கேட்டவுடனே
மனம் அமைதியடைகிறது
அதுதான் உண்மையான காதல்
நம் அன்பை
புரிந்து கொண்ட இதயம்
நம்முடைய
கஷ்டங்களை சொல்லாமலே
புரிந்து கொள்ளும்
நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்
வாழும் போது மட்டுமல்ல
வாழ்க்கை முடியும்
நேரத்திலும்
வாழும் காதல் என்றுமே
அழகானது
உன் அழைப்பென்றாலே
ஆனந்தம்
தான் மனதுக்கு