மௌனமாக கையில் உருகும்
அந்த நொடி
ஒரு நூல் எழுதும் அளவுக்கு
ஆழம் கொண்டது

தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்

தூரம் இருந்தாலும்
துடிப்பின் நடுநடுப்பில் அவள்தான்

குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற

உன் பெயர் உதடுகளில்
மௌனமாகத் தோன்றும்போது கூட
என் இதயம் அதை
ஓசையாக உனக்கே சொல்லிவிடும்

மையில்
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க...

முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லாவிட்டாலும்
எப்பொழுதும்
என் நினைவிலிருக்கிறாய்
என்னவனே

அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்

வாழ்க்கையின் புயல்களை
நாங்கள் ஒன்றாகச்
சமாளிக்க கடவுள்
எனக்கு கொடுத்த
வரம் என் கணவர்

மறைந்துகொண்டே இருக்கும்
உயிருக்கு பெயர் காதல்
அது நெஞ்சில் மட்டுமில்லை
ரத்தத்திலும் கலந்திருக்கிறது