தொடாமல் தீண்டும் புன்னகைதான்
உண்மையான நேசத்தின் அடையாளம்

உதிர்ந்த மலரையும்
பசுமையாக வைத்திருக்கிறது
இந்த நிலம்

மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!

வண்ணங்கள் யாவும்
வெறுமையாகிறது
நீ வானவில்லாய்
மறையும் போது

காதலில் தோற்றவர்கள்
தோற்றதற்காக அழவில்லை
இன்னும் அந்த நினைவுகள்
தொடர்கிறதே என்பதற்காக
தான் அழுகிறார்கள்

கண்ணாடி
காட்டாதபொழுதும்
எப்பொழுதும்
என் முன்னாடி
நீதான் அன்பே

இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே

உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....

இருண்ட வானையும்
அன்னாந்து ரசிக்க வைக்க
அவளால் மட்டுமே சாத்தியம்
(நிலவு மகள்)

வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது