சமையல் அறையிலும்
உன் காதலின்
ராஜ்ஜியம்
ஆள்கிறது எனை
பாசம் ஒரு பரிமாணம் அல்ல
அது ஒரு மூச்சு
கையை பிடித்த தருணத்தில்
எல்லா வார்த்தைகளும்
மௌனமாகிறதே
இருவரின் மௌனம் கூட
காதலின் மொழியாக மாறும் போது
ஆழம் அறிய முடியாது
நீ அருகில் வந்த
ஒவ்வொரு நொடியும்
மனசு காதலுக்கும்
ஆசைக்கும்
நடுவில் தடுமாறுது
சுவாசமும் கலந்திருக்கும்
அந்த நொடி
காதலுக்கு எல்லை
இல்லையென நிரூபிக்கிறது
நீ வாரி
கொள்ளும்
போதெல்லாம்
தாவி குதிக்கும்
சிறு குழந்தை
தான் நானும்
அன்பில்
காற்று தட்டும்
ஒவ்வொரு முறையும்
நினைவு துளி விழுகிறது
கண்கள் அழவில்லை
உதடுகள் பேசவில்லை
ஆனால் இதயம் மட்டும்
அதிகமா துடிக்கிறது
உன்னை கானாத போது
எத்தனை மைல் தூரம்
நீ இருந்தாலும்
எந்தன் மனதை
சிறைப் பிடித்தவன் நீயே
💖 பக்கம் 442 / 478
📋 Copied