உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...

பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்

ஒரு கணம் அருகில்
மறு கணம் தொலைவில்
நீயும் என்ன பொய்மானா

மறைந்தாலும்
தோன்றுவேன்
தேயும் நிலவாய்
அல்ல துளிர்விடும்
நினைவாய் உன்னுள்...

உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்

மனதுக்குள் பிறந்த வலி கூட
காதலின் முத்தம் போலத் தெரியும்

உன் உதடுகளின் தேன்
எனை முழுவதும் மீட்டெடுக்கிறது

வாங்கும் பொருளென்றால்
வாங்கி கொள்வேன்
உன் வலிகளை
எல்லாம்
நீ நலமாக

அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை

விழிகளை மூடியும் நினைவில்
தவிக்கும் தூரம்தான் ரோமான்ஸ்