காற்றலையில்
கலந்து வந்த
உன் குரல்
இதயத்தை
நனைக்க
மனமும் பூத்தது
பூஞ்சோலையாய்
காற்றலையில்
கலந்து வந்த
உன் குரல்
இதயத்தை
நனைக்க
மனமும் பூத்தது
பூஞ்சோலையாய்
நீ என்னை
உன் வசமாக்கும் முன்னரே
உன் ஒரு பார்வை
எனை முழுவதுமாக
அடிமையாக்கிவிட்டது
ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
நீ மட்டும் அழகில்லை
உன்னை நினைத்தே
உள்ளுக்குள் இம்சை
செய்யும் உன்
நினைவுகளும் இன்னும் அழகு
உன் வழியை
தொடர்ந்து
தொலைவதும்
சுகமான
அவஸ்தை தான்
என் விழிகளுக்கும்
நெற்றியில் பொட்டிட்டு
கொள்ளும் போதெல்லாம்
உன் இதழிட்ட
திலகம்
பௌர்ணமியாய்
ஒளிர்கிறது மனதில்
மௌனமாக காதலித்தாலும்
மனம் பேசிக்கொண்டே இருக்கும்
பகலில் வாழும்
நட்சத்திரங்களாய்
பரிணமிக்காமலேயே
போய்விடுகிறது
பக்குவப்பட்ட காதல்கள்
அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ
காதலின் ஆழம்
கடலாக இருந்தாலும்
உன் ஒரு முத்தம்
அந்த கரையை தொடுகிறது