காதல் என்பது
வார்த்தைகளில் இல்லை
அது ஒரு பார்வையின்
நடையில்தான் தெரியும்
காணாமல் போன
என் புன்னகையும்
நொடியில் மலர்கிறது
உனை காணும்
போதுதான் மகிழ்வோடு
இதயத்தின் அமைதியில்
பிறக்கும் பாசம்
காலத்தால் சோதிக்கப்பட்டாலும்
மேலும் ஆழமடைந்து நிற்கும்
நெருக்கமில்லாமல்
நிம்மதியை தரக்கூடிய
ஒரே நபர்
(காதலியாம்)
இதயம் அமைதியாக
தேடும் பாசம்
சிறு புன்னகையிலேயே
உலகத்தை முழுதும்
வெல்லும் சக்தியாகிறது
தொடுதல் என்ற சொல் கூட
அவளின் அருகில் அர்த்தம் மாறுகிறது
தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட
உடலைவிட
மனதைத் தீண்டும்
தொடுதல்தான்
உணர்வின் உச்சம்
அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை...
எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை என்னை
எப்போதுமே நினைத்தபடியே
இருக்கிறோன் நான் உன்னை
💖 பக்கம் 391 / 478
📋 Copied