சிலருடன் பேசும்போது
வார்த்தைகள் இல்லை
ஆனால் உணர்வுகள்
நிறைந்திருக்கும்

கிடைப்பது நீயாக இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்

செய்தி வாசித்து
நாட்கள் ஆயிற்று
உன்னில் வசிக்க
தொடங்கிய பிறகு
உன்னை தவிர வேறு
உலகம் கிடையாது எனக்கு

என் கனவுகளின் எல்லை
உன் அருகில் நின்றவுடன்
முடிவடைகிறது

அருகில் இல்லாத தேடல்தான்
உண்மையான காதலை
உணர வைத்தது

நான் மறைந்தாலும்
நம் மனதில் மறக்கப்படாத
அளவிற்கு ஒரு வாழ்வை
வாழ்த்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

உண்மை காதல்
உள்ளே நுழைந்தவுடன்
திரும்பவே
முடியாத சக்கரவியூகம்

காதல் என்பது
நேரம் அல்லது
இடம் இல்லாமல்
இரு உயிர்களை
இணைக்கும்
ஒரு அற்புதமான கதை

நிலையில்லா
நொடிகளென்றாலும்
தித்திக்குது மனதில்
தேனீராய் நீ

கண்கள் பேசும்
காதல் மொழி
வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டது