துடிப்பதை விட உன்னை
நினைப்பதற்கே நேரம்
சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு
உன் விரல்களின் பயணம்
என் தோலில் எச்சரிக்காத
மின்சாரத்தை எழுப்புகிறது
தயங்காமல்
கொன்று விடு
இல்லயேல்
நானுனை வென்றிடுவேன்
காதல் களத்தில்
என் சந்தோஷத்தை விட
உன் சந்தோஷம் தான்
முக்கியம் எனக்கு
என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...
சுவாசம் போலவே
ஒருவரின் அருகில் இருக்க வேண்டும்
என்பதே ரொமான்ஸின் உண்மை
தொடுதலில் துடிக்கும் இதயம்
பெயரில்லா உணர்வின் சாட்சியம்
என் சுவாசம்
நிறுத்தப்பட்டாலும்
உன் சுவாசம்
எனை உயிர்ப்பிக்கும்
மரணமே கிடையாது
நீயிருக்கும் வரை
இரு உள்ளங்கள்
ஒன்றாக துடிக்கும் போது
உலகமே மறைந்து விடுகிறது
மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று
💖 பக்கம் 348 / 478
📋 Copied