அனலான
உன் நெருக்கத்தில்
தணலாகுது மனம்
அணைத்துவிடு
கொஞ்சம் குளிரட்டும்
இரவும் குளிர் நிலவாய்
என் பெயரை
நீ மெதுவாக சொல்லும்போது
அதைவிட அழகான இசை
இந்த உலகத்தில் இல்லை
ஒருவரின் சிரிப்பில்
மற்றொருவரின் உலகம்
மறைவதே காதல்
தொடர்பில்
உன் குரல்
ஓய்ந்ததும்
செயலற்ற
செல்போனாய் மனம்
மீண்டும்
உன் அழைப்பு
வரும் வரை
புன்னகையின் பின்னால்
இருக்கும் கவலைக்கே பதில்
அவன் பார்வை
நீ இல்லாத உலகம்
வெறும் நிறமற்ற ஓவியம்
உன் காதலே அதற்கு
உயிர் ஊட்டும் வண்ணம்
தொலைந்திருக்கவே
பிடிக்கும்
இந்த மனதுக்கு
உன்னில் நானாகி
என்றும் காதலுடன்
இசையாக நிறைந்த மௌனத்தில்
தோள்களில் சாயும் கணங்கள்
ஒரு பரவசம்
விருப்பத்தின் அலை
மனதைச் சுற்றி எரியும்
தீ போல பாய்ந்து
எல்லா எல்லைகளையும் அழிக்கிறது
மனதிற்கு பிடித்தவரை
பார்த்து பேச
காத்திருப்பதே அவர்
மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்
💖 பக்கம் 346 / 478
📋 Copied