உன்னில் தொலைந்த
நிமிடங்களை
மீட்டி மீண்டும்
என்னை தொலைத்து
கொண்டிருக்கிறேன்
உன்னிடம்
என்னை மறந்துவிடு
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை...
நீயறியாமல்
உனை சு(வா)சிப்பதும்
ஒரு சுகம் தான்
காதல் கணவா
நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில் நானும்
என் மனதில் நீயும்
மிக அருகில் தான் இருக்கிறோம்
அழகில் மட்டும் இல்லை
ஆசையில் அழகு என்னும்
புதையல் இருக்கிறது
இதயத்தின் அமைதியில்
பிறக்கும் பாசம்
காலத்தால் சோதிக்கப்பட்டாலும்
மேலும் ஆழமடைந்து நிற்கும்
அணைத்து கொ(ல்)ள்ளும்
நினைவுகளை விரட்டியடிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
தட்டி தொலைக்குது மனதை
நீயில்லா பொழுதுகளில்
இரவின் மௌனத்தில்
கலக்கும் மூச்சுகள்
காதலைக் கவிதையாக்குகின்றன
உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது
வீணான வார்த்தைகளின்றி
புரிந்துகொள்ளும் அந்த
ஒரே மனம் காதலின் சொந்தம்
💖 பக்கம் 340 / 478
📋 Copied